அரசியல் செய்தி

தமிழ்நாடு

விபரீத முடிவுகளை எடுக்காதீங்க! : மாணவர்களுக்கு வேண்டுகோள்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
விபரீத முடிவுகள், எடுக்காதீங்க! :மாணவர்கள்,  இ.பி.எஸ்., வேண்டுகோள்

சென்னை : 'மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது, வேதனை அளிக்கிறது' என, முதல்வர் மற்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் அறிக்கை:இ.பி.எஸ்., - முதல்வர்: மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்தில் உள்ள காவல் குடியிருப்பில், ஆறாம் அணியில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும், முருகசுந்தரம் மகள் ஜோதிஸ்ரீதுர்கா, தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்ற செய்தி அறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு, என் ஆழ்ந்த இரங்கல்.வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும், மாணவ செல்வங்கள், இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது, மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

வாழ்வில் வெற்றி பெற, எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவ செல்வங்கள், மன உறுதியையும், விடா முயற்சியையும், வளர்த்து கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து, இறந்த செய்தி அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் துயருற்றிருக்கும், அவரது குடும்பத்தினருக்கு, என் ஆழ்ந்த இரங்கல்.

எதிர்கால துாண்களாகிய, மாணவ செல்வங்களின், இதுபோன்ற விபரீத முடிவுகள், மிகுந்த துயரத்தை அளிக்கின்றன. மாணவ செல்வங்கள், மனம் தளராமல், எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை, வளர்த்துக் கொள்ள வேண்டும்.பெற்றோரும், மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-செப்-202020:16:30 IST Report Abuse
skv srinivasankrishnaveni தேர்வு எழுத்தமாட்டோம் ஆனால் டாக்டர் ஆயிட்டுமத்தவா உசிரை எடுக்க போறானுகலோ ???? அதென்ன மெடிக்கல் இல்லேன்னா வெறுக்கல்வியே இல்லய்யாசாமி எவ்ளோபெருங்க பீ ஈ பி டேக் /எம் டேக் எல்லாம்படிச்சு ரெண்க்ளேபாஸ்பண்ணிட்டு வீட்டுலே முடிதாங்கிகிட்டு கிடாக்கானுக தெரியுமா வேறுவேலைக்கு போகமாட்டேன் இரண்டு ஆடம் வேறு
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-செப்-202020:08:07 IST Report Abuse
Endrum Indian விபரீத முடிவுகளை நீங்கள் எடுக்க உங்களுக்கு அதிகாரமில்லை எங்களுக்கு மட்டும் தான் அதற்கு அதிகாரம் உள்ளது என்று சொல்வது போல இருக்கின்றது இந்த அறிவுரை.
Rate this:
Cancel
13-செப்-202014:28:06 IST Report Abuse
ஆப்பு நீட் தேர்வில் அரியர் முறை வெச்சா நல்லது. ஆல்பாஸ் முறையில் பாசாயி டாக்டர் படிப்பிலும் அரியர் வெச்டு பாசாயிடுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X