கொரோனா பாதிப்பில் இருந்து 77.77 சதவீதம் பேர் மீண்டனர்

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுடில்லி:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து, 81 ஆயிரத்து, 533 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மீட்பு விகிதம், 77.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோரை கண்டறிய, நேற்று வரை, 5.52 கோடி பேரிடம், பரிசோதனைகள் நடத்தப் பட்டு உள்ளன.


பரிசோதனை



கடந்த, 24 மணி நேரத்தில், 10.91 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில், 97 ஆயிரத்து, 570 பேரிடம், கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது, ஒரே நாளில் பதிவான, அதிகபட்ச தொற்று எண்ணிக்கை. இதையடுத்து, மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 46.60 லட்சமாக உயர்ந்துள்ளது.இவர்களில், 9.58 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, பாதிப்பு விகிதத்தில், 20.56 சதவீதமாக உள்ளது.

கடந்த, 24 மணி நேரத்தில், வைரஸ் பாதிப்பில் இருந்து, 81 ஆயிரத்து, 533 பேர் குணமடைந்து உள்ளனர். இவர்களுடன், தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை, 36 லட்சத்து, 24 ஆயிரத்து, 196 ஆக அதிகரித்துள்ளது; குணமடைந்தோர் விகிதம், 77.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், மஹா.,வில், 442 பேர், கர்நாடகாவில், 130; ஆந்திரம் மற்றும் தமிழகத்தில், தலா, 77; உ.பி.,யில், 76; பஞ்சாபில், 63 பேர் உள்ளிட்ட, 1,201 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


மஹா., முதலிடம்



இவர்களுடன், பலியானோர் எண்ணிக்கை, 77 ஆயிரத்து, 472 என உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.66 சதவீதமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையில், 28 ஆயிரத்து, 724 பேருடன் மஹா., முதலிடத்தில் உள்ளது. தமிழகம், 8,231 பேருடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகம், 7,067 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X