அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் உயிரை பறிக்கும் ஆட்சி இது: ஸ்டாலின்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
மக்கள் உயிரை பறிக்கும் ஆட்சி இது: ஸ்டாலின்

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சி மக்களின் உயிரை பறிக்கும் ஆட்சியாக இருப்பதால், இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராக காத்திருக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

மறைந்த விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் படத்திறப்பு விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. அப்போது, ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், ஒரு ஆட்சி இருப்பது போல, முதல்வரும், அமைச்சர்களும் போட்டி போட்டு நடிக்கின்றனர்.



விரட்டியடிப்பு



கொரோனா பாதிப்பில், மக்களை அல்லாட விட்டு விட்டு, மாவட்ட வாரியாக, கட்சியினரை சந்தித்து வருகிறார் முதல்வர் இ.பி.எஸ்.', அவர், ஒரு மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும், அந்த மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாகிறது. அந்த நோயால் இறப்பும் அதிகரித்து விடுகிறது. அ.தி.மு.க., ஆட்சி மக்களின் உயிரை பறிக்கும் ஆட்சியாக இருப்பதால், இந்த ஆட்சியை விரட்டியடிக்க, மக்கள் தயாராக காத்திருக்கின்றனர்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-செப்-202023:42:34 IST Report Abuse
Rajagopal சாராய உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் மக்களை வாழ வைக்குமா? உங்கள் கட்சியில் இந்த விஷம் தயார் செய்யும் முதலைகள் இருக்கிறார்களே? அவர்கள் யார்? தெய்வங்களா?
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
13-செப்-202023:11:02 IST Report Abuse
g.kumaresan நீட் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்பு படிக்க வேண்டியது தானே .இதையே படிக்க முடியாதவர்கள் படித்து டாக்டர் ஆகி அவர்களை நம்பி எப்படி வைத்தியம் பார்ப்பது.இது திராவிட கூட்டத்திற்கு தெரியாதபோது இவர்கள் நடத்தும் கட்சியை என்ன தடை செய்ய கூடாது.
Rate this:
Cancel
vayalum vazhvum-saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-202022:32:21 IST Report Abuse
vayalum vazhvum-saravanan வடிவேலு இல்லாத குறையை தீர்க்க இவர எதிர்க்கட்சி தலைவராகவே வைத்திருப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X