மறுபடியும் தலைவராகிறார் ராகுல்?:காய் நகர்த்திய சோனியா

Updated : செப் 14, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
ஜனவரியில் மறுபடியும்! தலைவராகிறார் ராகுல்?

காங்., தலைவர் சோனியா, கட்சியில் மிகப்பெரிய மாற்றங்களை செய்திருப்பதன் மூலம், வரும் ஜனவரியில் நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், தன் மகன் ராகுலை, மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான ஆதரவு தளத்தை உருவாக்கியிருக்கிறார்.

கடந்த, 2019 லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின், கட்சியில் யாரும் கோரிக்கை வைக்காத நிலையிலும், ராகுல், கட்சித் தலைவர் பதவியை, ராஜினாமா செய்தார். இது, காங்கிரசை தாண்டி, தேசிய அரசியல் வட்டாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ராகுல், நாடகம் ஆடுகிறார்; சில நாட்களில் சமாதானம் ஆகிவிடுவார் என்றே, பலரும் நினைத்தனர். ஆனால், தன் ராஜினாமா முடிவில், அவர் உறுதியை காட்டியபோது, பலரும் அதிர்ந்தனர்.

ராகுலின் கோபத்திற்கு காரணம், கட்சியின் மூத்த தலைவர்கள் தான்.


வாக்குறுதிதேர்தலுக்கு முன், ராகுல் நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, முக்கிய மாநிலங்களின் வெற்றி நிலவரம் குறித்து, அவர், மூத்த தலைவர்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.அப்போது, மாநில பொறுப்பாளர்களாக இருந்த, கமல்நாத், குலாம்நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர், தத்தம் மாநிலங்களில், எம்.பி.,க்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, 'கணிசமான எம்.பி.,க்கள் காங்கிரசுக்கு நிச்சயம்' என, வாக்குறுதி அளித்தனர்.ஆனால், தேர்தல் முடிவுகள் படுதோல்வியை காட்டியதும், இந்த மூத்த தலைவர்கள், தன்னை நம்ப வைத்து, கழுத்தறுத்துவிட்டனர் என, ராகுல் பொங்கினார்.

தன் தலைமையில் வெற்றி காண்பதை, இத்தலைவர்கள் விரும்பவில்லை என்பதும் அவருக்கு தெரிய வந்தது.இந்த தலைவர்கள் பொறுப்புகளில் இருக்கும் வரையில், தம்மால் தலைவர் பதவியில் இருக்க முடியாதென, தன் நலம் விரும்பிகளிடம், ராகுல் தெரிவித்தார்.ஆனாலும், கட்சியில் தன் பிடியை விட்டுவிடாமல், திரைமறைவில், அனைத்து விஷயங்களிலும், தலையிட்டு வந்தார்.
இதுதான், மூத்த தலைவர்களுக்கு கடுப்பாகி விட்டது. 'பொறுப்பை ஏற்கவும் தயக்கம்; புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சிக்கும் முட்டுக்கட்டை' என்பது சரியல்ல என கூறி, மூத்த தலைவர்கள், 23 பேர், சோனியாவுக்கு கடிதம் எழுதி, பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்த வாய்ப்பை, சரியாக பயன்படுத்த முடிவெடுத்த இடைக்கால தலைவர் சோனியா, நேற்று முன்தினம், கட்சியில் அதிரடியாக நிர்வாக மாற்றங்களை செய்து, 'விசுவாசம் மட்டுமே அளவுகோல்' என, கோடிட்டு காட்டியுள்ளார்.
சமமாக பகிர்ந்தளிப்புராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பொறுப்பில் இருந்தும் கூட, சோனியாவுக்கு கடிதம் எழுதிய குலாம்நபி ஆசாத்திடமிருந்து, பொதுச் செயலர் பதவி பிடுங்கப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கே, மோதிலால் வோரா போன்ற முக்கியஸ்தர்கள் வயதை காரணம் கூறி, ஓரங்கட்டப்பட்டனர்.மிகவும் சக்திவாய்ந்த காரிய கமிட்டிக்கு, தேர்தல் நடத்த வேண்டுமென கடிதத்தில் கூறப்பட்டிருந்தும், அது நிராகரிக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான வகையில், மூத்தவர்கள், இளையவர்கள் என, சமமாக பகிர்ந்தளித்து, நியமனம் நடந்துள்ளது.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, இடைக்கால தலைவருக்கு, எல்லா விதங்களிலும் ஆலோசனை வழங்க, ஆறு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான், கட்சியை வழி நடத்தப் போகின்றனர்.இதில் இடம்பெற்று உள்ள, ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக் என, நான்கு பேருமே, ஜன்பத் இல்லத்தின் பரம்பரை விசுவாசிகள். புதிய வரவுகளான, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா இருவரும், ராகுலின் கண், காது போன்றவர்கள்.ஒன்பது புதிய பொதுச் செயலர்கள், 17 புதிய மாநில பொறுப்பாளர்கள் நியமனத்திலும் வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா இடம் பெற்றுள்ளனர்.
ராகுலின் விசுவாசிகள்புனியா, ஜிஜேந்திர சிங், அஜய் மக்கான், மாணிக்கம் தாகூர், ராஜிவ் சுக்லா ஆர்.பி.என்.சிங், விவேக் பன்சல் போன்ற இளையவர்கள், ராகுலின் வளையத்தில் இருப்பவர்கள்.காரியக் கமிட்டி உட்பட, தேர்தல் தொடர்பான அனைத்தையும் நடத்தும் குழுவுக்கு, புதிய தலைவரான மதுசூதன் மிஸ்த்ரி துவங்கி, இதிலுள்ள உறுப்பினர்கள் ஜோதிமணி, ராஜேஷ் மிஸ்ரா, பைரே கவுடா என, முக்கால்வாசி பேர், ராகுலின் விசுவாசிகளே.இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், ராகுலை, மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான முன்னேற்பாடுகளை, சோனியா கனகச்சிதமாக செய்து முடித்துள்ளார்.


கையெழுத்து போடாத சிதம்பரத்துக்கு 'லக்'கட்சியின் மிக உயர்ந்த அமைப்பான, காரியக் கமிட்டியில் உறுப்பினராவது, தமிழகத்துக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. 10 ஆண்டுகளாக, மத்திய அரசின் முக்கிய பதவிகளில் இருந்தபோதும், சிதம்பரத்துக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை. அழைப்பாளராக மட்டுமே பங்கேற்று வந்தார். மூப்பனாருக்குப் பின், தற்போது, முதன்முறையாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக ஆகியுள்ளார்.இது குறித்து விசாரித்தபோது, தலைமைக்கு எதிராக, மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்தில், கையெழுத்து கேட்டு வந்தபோது, 'சோனியா தலைமைக்கும், அந்த குடும்பத்துக்கும் எதிராக நிற்க மாட்டேன்' என கூறி, சிதம்பரம் மறுத்துவிட்டார். அதனாலேயே, அவருக்கு, நிரந்தர உறுப்பினர் பதவி என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


மும்பை அல்லது ஜெய்ப்பூரில்அகில இந்திய காங்., மாநாடுஆறு மாதத்திற்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என, ஏற்கனவே நடைபெற்ற காரியக் கமிட்டி கூட்டத்தில், முடிவெடுக்கப்பட்டது. விதிகளின் படி, அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தான், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.அதன்படி, வரும் ஜனவரியில், இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனேகமாக, மும்பை அல்லது ஜெய்ப்பூரில் மாநாடு
நடைபெறலாம் என தெரிகிறது. அதில், திட்டமிட்டபடி, ராகுல் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம். அதோடு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பதிலாக, லோக்சபாவில் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பார்லிமென்டில் முன்வரிசையில் அமர்ந்து, கட்சியை வழிநடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
13-செப்-202023:48:41 IST Report Abuse
N.K நேரு வாரிசுகள் மட்டுமே காங்கிரஸ் தலைவராக முடியும் என்று வெளிப்படையாக, கட்சியின் கொள்கையாக விதிமுறையாக அறிவித்துவிடலாமே. எதுக்கு இந்த ஜனநாயக வேஷம் நாடகம் எல்லாம்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
13-செப்-202022:23:10 IST Report Abuse
S.Ganesan அட போங்கப்பா . இது ஏற்கனவே எதிர்பார்த்துதான்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
13-செப்-202022:12:23 IST Report Abuse
adalarasan இதை முதலிலேயே,செய்து இருக்கலாம்இத்தனை மாதங்கலா,, டிராமா, வேண்டியதில்லை?என்னமோ, தலைவர் பதவி ..வேண்டாம் என்று…நாடகம்...எல்லாம்..?இவராய் விட்டால், வேறு நல்ல ஆளே ..இல்லையா இவ்வளவு பெரிய கட்சஜில…?வெட்கக்கேடு…?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X