அரசியல் செய்தி

தமிழ்நாடு

8 மாதத்தில் மாணவர்களுக்கு விடியல் பிறக்கும்: உதயநிதி

Added : செப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:''மாணவர்கள் தைரியமாக, 'நீட்' தேர்வை எழுதுங்கள்; எட்டு மாதங்களில் மாணவர்களுக்கு, நல்ல விடிவு காலம் பிறக்கும்,'' என, தி.மு.க., இளைஞர் அணி செயலர், உதயநிதி கூறினார்.

மதுரை செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:மதுரையில், 'நீட்' தேர்வுக்காக பயந்து, ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். 'நீட்' தேர்வால், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது, வேதனையளிப்பதாக உள்ளது. இதற்கு முழுக்க, மத்திய பா.ஜ., ஆட்சியும், மாநில அ.தி.மு.க., அரசும் தான் காரணம்.

'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த தேர்வால் நான்கு ஆண்டுகளில், 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.மாணவர்கள் தேர்வை தைரியமாக எழுதுங்கள். எட்டு மாதங்களில், கண்டிப்பாக மாணவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.இவ்வாறு, உதயநிதி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-202013:20:18 IST Report Abuse
Bhaskaran தேர்வு களுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பவர்களை என்ன விதத்தில் சேர்ப்பது .மனித புனிதன் மொரார்ஜியின் மகள் தான் சரியாக தேர்வெழுதவில்லை என்று தந்தையிடம் சொன்னபோது பரவாயில்லை அடுத்தமுறை எழுதிக்கொள்ளலாம்என்று சொன்னார் ஆனால் மகள் தற்கொலை செய்துகொண்டபோது சொன்ன வார்த்தை பைத்தியக்காரரி .
Rate this:
Cancel
NoBs - chennai,இந்தியா
13-செப்-202007:37:38 IST Report Abuse
NoBs இவர் மற்றும் சுடலை கமலா ஹாசன் போன்றவர்கள் கல்வியை பற்றி பேசும் போது வயிறு எரிகிறது. மடமை என்பது தமிழர் உடமையடா என்று சொல்ல வைக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X