அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் உயிரை பறிக்கும் ஆட்சி இது: ஸ்டாலின்

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:'அ.தி.மு.க., ஆட்சி மக்களின் உயிரை பறிக்கும் ஆட்சியாக இருப்பதால், இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராக காத்திருக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

மறைந்த விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் படத்திறப்பு விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. அப்போது, ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில், ஒரு ஆட்சி இருப்பது போல, முதல்வரும், அமைச்சர்களும் போட்டி போட்டு நடிக்கின்றனர்.


விரட்டியடிப்பு

கொரோனா பாதிப்பில், மக்களை அல்லாட விட்டு விட்டு, மாவட்ட வாரியாக, கட்சியினரை சந்தித்து வருகிறார் முதல்வர் இ.பி.எஸ்.', அவர், ஒரு மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும், அந்த மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாகிறது. அந்த நோயால் இறப்பும் அதிகரித்து விடுகிறது. அ.தி.மு.க., ஆட்சி மக்களின் உயிரை பறிக்கும் ஆட்சியாக இருப்பதால், இந்த ஆட்சியை விரட்டியடிக்க, மக்கள் தயாராக காத்திருக்கின்றனர்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
13-செப்-202003:03:13 IST Report Abuse
Baskar ஐயோ ஓநாய் அழுகிறது.கடந்த பத்தாண்டு முன்னர் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தார்கள். பாலும் தேனும் ஆறாய் ஓடியது. மக்கள் இன்னும் மறக்கவில்லை உங்கள் ஆட்சியில் நடந்த கொடுமைகளை. இனியும் இந்த ஆட்சி வேண்டாம் என்றுதான் மக்கள் உங்களை ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். இனியும் ஒதுக்குவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X