கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., வாழ்க்கை தொடர் 'குயினு'க்கு தடையில்லை

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, குயின் தொடரை ஒளிபரப்ப தடையில்லை.

ஜெ., வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் உருவாகும், தலைவி என்ற படத்தை, ஏ.எல்.விஜய் இயக்குகிறார். குயின் என்ற இணையதள தொடரை, கவுதம் வாசுதேவமேனன் இயக்குகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெ., பாத்திரத்தில் நடிக்கிறார்.

சினிமா படத்திலும், இணையதள தொடரிலும், ஜெ., பற்றி அவதுாறான விஷயங்கள் இடம் பெற்றால், அவரது புகழுக்கு களங்கம் ஏற்படும். இவற்றை தயாரிக்க, என் அனுமதி பெறப்படவில்லை என்பதால், தடை விதிக்கக்கோரி, ஜெ.,யின் சகோதரர் மகள் தீபா, வழக்கு தொடுத்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்தார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

கவுதம் வாசுதேவமேனனின் குயின் தொடர், தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பாக உள்ளதால், அதற்கு தடை விதிக்கும்படி, தீபா தரப்பில் கோரப்பட்டது. கவுதம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வேறு மொழிகளில் குயின் தொடர் வெளியாகி விட்டது. தமிழில், ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது' என்றார். அதைத்தொடர்ந்து, தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க மறுத்து, விசாரணையை, வரும், 28ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X