அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழிலாளரை தேடி செல்லும் அம்மா உணவகங்கள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

கட்டுமான தொழிலாளர்களின் பணியிடத்துக்கே சென்று, உணவு வழங்கும் புதிய திட்டத்தை, அம்மா உணவகம் வாயிலாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், ஏழை மக்களுக்கு மலிவான விலையில், தரமான உணவு கிடைக்க, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன. கொரோனா பேரிடர் காலத்தில், ஏழை மக்களுக்கு அம்மா உணவகங்கள் வாயிலாக, இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்டுமான தொழிலாளர்களின் பணியிடத்துக்கே சென்று, உணவு வழங்கும் திட்டத்தை, அம்மா உணவகங்கள் வாயிலாக செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலர் சண்முகம் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கட்டுமான தொழிலாளர்கள், உணவுக்காக அம்மா உணவகங்களை தேடி செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக, வாகனங்கள் வாயிலாக அவர்களின் பணியிடம், இருப்பிடத்துக்கே சென்று, உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

அதற்கு முதல்கட்டமாக, இரண்டு வாகனங்கள் வாங்க, தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்புக்குஏற்ப, இத்திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

-- நமது நிருபர் - -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X