கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ விபத்து

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.



latest tamil news



அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வனப்பகுதிகளில் கடந்த ஆக., மாதம் முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாதவகையில் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது. கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் 100 க்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து கலிபோர்னியா, ஒரிகான், வாஷிங்டன் உள்ளிட்ட சில பகுதிகள் மிக மோசமாக காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியாவில் காட்டுத்தீயை அணைக்க பல்வேறு முயற்சிக் மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான இடங்களில் தீ அணைக்கப்பட்டாலும், சில இடங்கள் கட்டுக்குள் வராமல் தீ வேகமாக பரவி அச்சுறுத்துகிறது.
இந்த காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியாவின் வான்வெளி முழுவதும் சில தினங்களாக அடர் செந்நிறமாக மாறியதுடன் புகை மண்டலங்களாகவும் உள்ளன. போர்ட்லாந்தின் தெற்கு பகுதியில் மொலாலா நகரில் இருந்து மட்டும் பாதுகாப்பு கருதி சுமார் 9,000 பேர் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் மட்டும் 3,9000 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன.


latest tamil news



இது குறித்து ஒரிகான் கவர்னர் கடே பிரவுன் கூறுகையில், இந்த எதிர்பாராத விபத்துகளை தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 5 லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை உள்ளது. தற்போது காற்றின் வேகம் குறைந்து மழைக்கான வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காட்டுத் தீ கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-202023:28:11 IST Report Abuse
Tamilan அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ . சீனாவில் கட்டுக்கடங்காத மழையால் அவதி . இயர்கையுடன் போரிட நினைப்பதால் ஏற்பட்ட வம்பு , உலகின் மிக பெரிய இரு வல்லரசுகளுக்கு . அத்தனையும் , அணைத்து வல்லரசுகளுக்கு, மற்றும் அனைவருக்கும் ஏற்பட்ட கொரானாவின் அவதிக்கு நடுவில் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X