சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு கொரோனா பாதிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:சட்டசபை கூட்டத்தையொட்டி நடத்தப்பட்ட, கொரோனா பரிசோதனையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேருக்கு, கொரோனா நோய் தொற்று உறுதியானது.

தமிழக சட்டசபை கூட்டம், நாளை துவங்க உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, சுகாதாரத் துறை அதிகாரிகள், அவர்களின் வீடுகளுக்கே சென்று, கொரோனா பரிசோதனை நடத்தினர். எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பிலும், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.எதிர்க்கட்சி தலைவர்ஸ்டாலின், தனியார் மருத்துவ மனையில் பரிசோதனை செய்தார். அதிகாரிகள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோருக்கு, சட்டசபை செயலகத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. சபாநாயகர், முதல்வர்,துணை முதல்வர், அமைச்சர்கள் யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.முன்னாள் அமைச்சரும்,ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.,வுமான சண்முகநாதன்;திருச்செங்கோடு எம்.எல்.ஏ., பொன்.சரஸ்வதி,திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு எம்.எல்.ஏ., மோகன் ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.

தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட மூன்று பேரும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்.கொரோனா பரிசோதனை செய்து, நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் மற்றும் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே, சட்டசபை கூட்டம் நடக்கும் பகுதிக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X