பொது செய்தி

தமிழ்நாடு

* செய்தி சில வரிகளில்...

Added : செப் 12, 2020
Share
Advertisement

மின் கம்பம் சேதம்

பிரையாங்குப்பம்: பிரையாங்குப்பம் அடுத்த, ஏகாட்டூர் ஏரியில், சவுடு மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகள் அதிக பாரத்துடன் அசுர வேகத்தில் செல்கின்றன.நேற்று, பிரையாங்குப்பம் கிராமத்தில், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில், சவுடு மண் லாரி மோதியதில், மின் கம்பம் முறிந்து விழுந்து சேதமானது. மின் வாரியத்தினர் சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில், ஏழு மணி நேரம் மின்சாரம் பாதித்தது.

ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், மெய்யூர் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான இடத்தை, தனி நபர் ஒருவர், தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது. இதை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு நிலத்தை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கோஷமிட்டனர். இதை மனுவாக, துயர் துடைப்பு வட்டாட்சியர் லதாவிடம் மனுவாக வழங்கினர்.

பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

உத்திரமேரூர்: திருவள்ளூர் சேவாலயா அமைப்பு சார்பில், பாரதி, காந்தி, விவேகானந்தர் பிறந்தநாள் விழாவையொட்டி, பேச்சு மற்றும் கட்டுரை போட்டி, 'ஆன்லைன்' வழியாக நடந்தது. இப்போட்டியில், 20 மாவட்டங்களில் இருந்து, பல பள்ளிகளைச் சேர்ந்த, 586 பேர் பங்கேற்றனர். இதில், உத்திரமேரூர் ஒன்று முதல் மூன்றாவது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவியர் பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில், மூன்றாமிடம் பெற்றனர்.வெற்றி வெற்ற மாணவ - மாணவியரை பள்ளி தலைமையாசிரியை சந்தானலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X