பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் பணி நீக்கம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை: ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்து, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், நிரந்தர பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம், துப்புரவு பணியை தனியாரிடம் அளிக்க கூடாது, கொரோனா கால நிவாரண நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1,500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், சில தினங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில், அங்கும் போராட்டத்தை தொடர்ந்தனர். பின், மாநகராட்சியுடன் நடந்த பேச்சை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்து, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.மேலும், போராட்டத்தில் ஈடபட்ட நிரந்தர பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில், அவர்கள் அளிக்கும் விளக்கத்தை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X