சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விருந்தில் சதி திட்டம் வாலிபர் வெட்டிக்கொலை

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருவேற்காடு: வாலிபரை, மது விருந்துக்கு அழைத்துச் சென்ற மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

சென்னை, திருவேற்காடு அருகே கோலடி, அன்பு நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 23. அவரை, நேற்று காலை, 9:30 மணி அளவில், அவரது நண்பர்கள், மது குடிப்பதற்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று மதியம், 1:00 மணி அளவில், அயனம்பாக்கம், செங்கல் தொழிலகம் அருகே உள்ள முட்புதரில், அவரது சடலம் கிடந்தது. இது குறித்து, திருவேற்காடு போலீசாருக்கு தெரியவந்தது.

போரூர் உதவி கமிஷனர் சம்பத் தலைமையில், அங்கு சென்ற போலீசார், அஜீத்குமாரின் சடலத்தை மீட்டனர். அவர், சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.அஜித்குமார் பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் என, கூறப்படுகிறது. அதனால், முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது கோலடி ஏரி மற்றும் அயனம்பாக்கம் ஏரிக்கரைகளில் நடக்கும் கஞ்சா விற்பனை போட்டியால், கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X