மண்டபத்தில் பழமையான நெற்களஞ்சியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்டபத்தில் பழமையான நெற்களஞ்சியம்

Added : செப் 12, 2020
Share

-ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 200 ஆண்டு பழமையானநெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது. இதை பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம் வருபவர்களுக்காக சேதுபதிமன்னர்கள் பல சத்திரங்களைக் கட்டியுள்ளனர்.

சேதுநாட்டில் அதிகமான நெல் விளைச்சல் இருக்கும் கிழக்குக் கடற்கரைப்பகுதிகளிலும், பாம்பன், ராமேஸ்வரத்திலும் சிறிய நெற்களஞ்சியங் கள் இருந்துள்ளன.தற்போது மண்டபத்தில் 200ஆண்டுகால பழமையான, நெற்களஞ்சியம் உள்ளது. இப்பகுதியில்நெல் விளைச்சல் இல்லாததால் பிற பகுதிகளிலிருந்து வரும் நெல்லை சேமித்து வைத்து சத்திரங்களுக்கு வழங்குவதற்காக நெற்களஞ்சியம்அமைத்துள்ளனர்.இது 15 அடி உயரமும் 50 அடி சுற்றளவும் வெயில், மழை,கடல் காற்றால் பாதிக்காத வகையில் வட்டவடிவில் உள்ளது. கீழே அகன்றும்மேலே குறுகியும் ஒரு குதிர் போல உள்ளது.

கடற்கரைப் பாறைக் கற்கள்,சுண்ணாம்புச் சாந்து மூலம் கட்டப்பட்டுள்ளது. மழைநீர் சுவரில் படாமல்வழிந்தோடும் அமைப்பு மற்றும் வாசல் முன்னால் வளைவான சுற்றுச்சுவர் விளக்கேற்ற ஒரு மாடக்குழி உள்ளது. தற்போது நெற்களஞ்சியம்அழியும் நிலையில் உள்ளது.பி ரம்மச்சாரிகள் வழிபாடுராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனதலைவர் ராஜகுரு கூறியதாவது:மன்னர் காலத்தில் இக்களஞ்சியத்தைப் பாதுகாக்க பிரம்மச்சாரியான இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு காவலர்களாக இருந்தமுனியசாமி, சன்னியாசி, பிச்சை, கருப்பையா, தொட்டிச்சி ஆகியோரின் சமாதிகள் களஞ்சியம் அருகேயுள்ளன. இவை களஞ்சியம் கோயிலாகமக்களால் வழிபடப்படுகிறது. இதன் நினைவாக இப்பகுதி மக்களிடம்களஞ்சியம், களஞ்சியராஜா, களஞ்சியராணி என பெயர் வைக்கும் பழக்கமும் உள்ளது. தற்போது நெற்களஞ்சியத்தின் கூம்பு வடிவிலான இதன் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. உள்ளே மரங்கள் வளர்ந்து அழியும் நிலையில் உள்ளது. இதனை பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க தொல்லியல்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனக்கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X