பொது செய்தி

தமிழ்நாடு

திருமழிசை, மாதவரம் மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை: திருமழிசை மற்றும் மாதவரம் தற்காலிக மார்க்கெட்டுகளுக்கு, இன்று வியாபாரிகள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

கோயம்பேடில், கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து, திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் பழ மார்க்கெட் ஆகியவை திறக்கப்பட்டன.இங்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து, காய்கறிகள், பழங்கள் எடுத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இரவு, 10:௦௦ மணிமுதல் காலை, 8:௦௦ மணிவரை, இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பொருட்கள் தேங்கும் நாட்களில், காலை, 10:௦௦ மணிவரை, அவற்றை விற்பதற்கு அனுமதி கிடைத்து வருகிறது.

இரண்டு மாதங்களாக, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், சனிக்கிழமை காலையுடன் விற்பனை நிறுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை, முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், திருமழிசை மற்றும் மாதவரம் மார்க்கெட் வியாபாரிகள், இன்று கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால், செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு, பொருட்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X