சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு பயத்தில் மதுரை மாணவி, தர்மபுரி மாணவர் தற்கொலை

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
'நீட்' தேர்வு பயத்தில் மாணவி, மாணவர் தற்கொலை

மதுரை,: 'நீட்' தேர்வு பீதியில், மதுரை மாணவி, தர்மபுரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன்குடியிருப்பில் வசிப்பவர், போலீஸ் எஸ்.ஐ., முருக சுந்தரம். இவரது மகள் ஜோதி ஸ்ரீதுர்கா, 19. இவர் கடந்தாண்டு, 'நீட்' தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால், மருத்துவ படிப்பு கனவு நிறைவேறவில்லை.

இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் எனக் கருதி, முழு நேரமாக தேர்வுக்கு தயாரானார்.இன்று தேர்வு நடக்க உள்ள நிலையில், நேற்று அதிகாலை, 1:00 மணி வரை படிக்கப் போவதாக கூறி அறைக்குள் சென்றவர், அதிகாலை, 4:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடல், நேற்று மதியம் தத்தனேரியில் தகனம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலையை தொடர்ந்து, 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி, மதுரையில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




கடிதம்



ஜோதி ஸ்ரீதுர்கா எழுதி வைத்திருந்த கடிதம்:நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால், பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில்தோல்வி அடைந்துவிட்டால், அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருப்பேன். இது, யாருடையதவறும் இல்லை.என் மேல், நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள். ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கா விட்டால், உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகி இருக்கும்.

இவ்வாறு, குறிப்பிட்டு உள்ளார். அவர் பேசிய, 'ஆடியோ' வில், 'யார், யாரையும் குற்றம் சாட்டாதீங்க. யாருடைய தப்பும் இல்லை. என்ன தான் நான் படிச்சாலும் பயமா இருக்கு. பெயிலாகி விடுவேனோன்னு பயமா இருக்கு.'ஒருவேளை, 'சீட்' கிடைக்கலைன்னா நீங்க எல்லாரும் ஏமாந்திடுவீங்க. ஸாரி அப்பா, ஸாரி அம்மா. டாட்டா. நீங்க சோகமா இருக்காதீங்க. தம்பி ஸ்ரீதர் இருக்கான். அவனோட எதிர்காலத்திற்காக நீங்க சோகமா இருக்கக்கூடாது. அவனை நல்லா படிக்க வையுங்க. பைடா ஸ்ரீதர். ஐம் ஸாரி. 'ஐ லவ் யூ. ஸாரி அப்பா. ப்ளீஸ்... உங்க ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க. நீங்க ஹார்ட் பேஷன்ட். என்னை பற்றி ரொம்ப கவலைப்படாதீங்க. ஐம் ஸாரி' என பேசியுள்ளார்.


துாக்கு



தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவில் வசிப்பவர், மணிவண்ணன்.சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த இவர், தர்மபுரியில் டிராக்டர் விற்பனை தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களது மகன் ஆதித்யா, 20. இவர், 'ஆன்லைன்' மூலம், 'நீட்' தேர்வு பயிற்சி பெற்று வந்தார். இன்று, சேலம், குகைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மையத்தில், 'நீட்' தேர்வு எழுத இருந்தார்.நேற்று காலை அவரது பெற்றோர், பூசாரிப்பட்டியில் உள்ள தங்களதுவிவசாய நிலத்துக்கு சென்றனர். மாலை, 6:30 மணிக்கு, அவர்கள் வீடு திரும்பியபோது, ஆதித்யா துாக்கில் சடலமாக தொங்கியதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து, 'நீட்' தேர்வு பீதியால், ஆதித்யா தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.


அமைச்சர் அஞ்சலி



முன்னதாக, அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு, வருவாய்த் துறை அமைச்சர்உதயகுமார் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:நீட் தேர்வு மட்டுமே எதிர்காலம் அல்ல. எதையும் தைரியமாக எதிர்கொண்டால் வெற்றி பெறலாம். மதுரை பார்வையற்ற மாணவி பூரண சுந்தரி, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, உலகப் பார்வையை தன்பால் இழுத்தார். மாணவர்கள் நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி பெறலாம். நீட் தேர்வில் இருந்து, முழுமையாக விலக்கு வேண்டி, அரசு சார்பில், தொடர்ந்து உரிமை குரல் எழுப்பி வருகிறோம். நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-செப்-202016:48:54 IST Report Abuse
Rafi இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 37 இருப்பது தமிழகத்தில் குஜராத்தில் வெறும் மூன்று மட்டுமே, அதேபோல் சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 22 தமிழகத்தில், குஜராத்தில் வெறும் 5 மட்டுமே, 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழகத்தில் 24, குஜராத்தில் இரண்டு மட்டுமே, இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 29 இல் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழகம் , ஆக அணைத்து தரங்களிலும் ஏனைய இந்திய மாநிலங்களை விட வலுவான நிலையில் நாம் இருக்கின்றோம் என்றால் திராவிட ஆட்சியில் மக்களை நேசித்ததன் விளைவே, ஏழ்மை சதவிகிதம் 11.28%, வளர்ச்சி,வளர்ச்சி என்று கூவப்படும் குஜராத்தோ 16.63%, ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் தமிழகம் 18%, குஜராத்தின் நிலையோ 33.5% மருத்துவர்களின் எண்ணிக்கையோ இலச்சத்திற்கு 149 என்ற உயர்ந்த எண்ணிக்கையில் நாம் இருக்க குஜராத்தோ 87 மட்டுமே தான், நம் மருத்துவர்கள் பலர் உலகம் போற்றும் சிகிச்சையை எப்போதோ தமிழகத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அவர்கள் நீட் தேர்வு எழுதீயவர்கள் கிடையாது. ஏன் குஜராத்தை ஒப்பீடுகின்றேன் என்றால் இந்தியாவின் வளர்ந்த மாநிலம் என்று பெருமை பேசுபவர்களுக்கு, சுட்டிக்காட்டவே, ஏனைய மாநிலங்களை ஒப்பிடும் போது நாம் எட்டாத உயரத்தில் இருக்கின்றோம் என்பதே உண்மை. இவைகள் மத்திய அரசின் ரேங்க் HRD 2017 வெளிட்டதுதான். இந்தி படித்த மாநிலங்களை விட இந்தி படிக்காமலே நம் சொந்த காலில், மொழியில் கடந்து வந்த பாதை. இந்தியை விட ஆங்கிலத்திற்கு முக்கியம் கொடுத்ததால் உலகமே போற்றும் உயர்ந்த பதவிகள் நாம் பெற்று சாதித்து வருகின்றோம் என்பதை தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். நீட் என்பது நம் உயரத்தை இந்தி பேசும் மக்களின் இப்போதைய தரத்திற்கு இறக்கவே என்பதும் விளங்கிக்கொள்ள முடியும்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
13-செப்-202008:31:37 IST Report Abuse
கொக்கி குமாரு நீட் தற்கொலைகளை தடுக்க ஒரே வழி ஊழல்களின் தந்தை என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி கொண்டு வந்த, வெறும் 100 பக்கங்கள் கொண்ட, அண்ணா நாமம் வாழ்க, கலைஞர் நாமம் வாழ்க, ராமசாமி நாமம் வாழ்க என்று சொல்லும் குப்பையான சமச்சீர் கல்வியை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் CBSE பாட திட்டங்களை கொண்டுவந்து, அனைத்து மாணவர்களையும் ஒரே தளத்தில் வைத்து தேர்வு நடத்துவதுதான். இதெற்கெல்லாம் சுடலையும், சுடலையிடம் ஓசி சோறு வாங்கி உண்ணும் ஓசி சோறு பார்டிகளும் போராட மாட்டார்கள். அவர்களின் கல்வி நிறுவனங்களுக்கு வருமானம் போய்விடுமே. சுடலையை சொல்லி குற்றமில்லை. இன்னமும் சுடலை போன்றவர்களுக்கு ஓட்டு போடும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக உடன்பிறப்புகளை சொல்லணும்.
Rate this:
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
13-செப்-202008:19:05 IST Report Abuse
Chowkidar Modikumar பெற்றோர்கள் கவனத்திற்கு, நீட் தேர்வு எழுத இருக்கும் அல்லது எழுதிய பின் முடிவு வரும் வரை தங்களின் பிள்ளைகளை கவனமாக வீட்டிலேயே பாது காத்து வைத்திருங்கள், திமுக போன்ற நய வஞ்சக கட்சிகள் நீட் தேர்வை வைத்து அரசியல் பிழைப்பு செய்ய உங்கள் பிள்ளைகளை கொலை செய்து தற்கொலையாக மாற்றுவார்கள். உஷார் பெற்றோர்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X