பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ண ஜெயந்தி விழா

Added : செப் 12, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த தேர்போகியில் உள்ள பாமா, ருக்மணி, நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பாமா, ருக்மணி, நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இளைஞர்களுக்கான வழுக்குமரம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தது. வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர். தேர்போகி யாதவர் இளைஞர் சங்கத்தினர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.பரமக்குடிஅரியனேந்தல் கிராமத்தில் ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர் கோயிலில் இரண்டு நாட்கள் விழா நடந்தது.

குழந்தைகள் கண்ணன், ராதை வேடமிட்டு வந்தனர்.கோயில் வளாகத்தில் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நடந்தன. மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. பெண்கள் கோயில் முன் பொங்கலிட்டனர். யாதவர் சங்க தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வேதாத்யயன சபையினர் கிருஷ்ண யக்ஞம் நடத்தினர். பெருமாள் சேஷ வாகனத்தில் கிருஷ்ணாவதாரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து உறியடித்தல் நிகழ்ச்சி நடந்தது.*

பரமக்குடி பாரதிநகரில் ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோயிலில் மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தன.*எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடவாகனத்தில் பெருமாள் வீதிவலம் வந்து, உறியடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X