சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்; தாய், சகோதரியிடம் விசாரணை

Added : செப் 12, 2020
Share
Advertisement
 ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்; தாய், சகோதரியிடம் விசாரணை

சென்னை: சென்னையில், ரவுடி சங்கரை, 'என்கவுன்டர்' முறையில், போலீசார் சுட்டுக்கொன்றது தொடர்பாக, தாய், சகோதரி உள்ளிட்டோரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரித்தனர்.

சென்னை, அயனாவரம், கே.கே.நகரைச் சேர்ந்தவர் சங்கர், 44; ரவுடி. இவர் மீது, கொலை உள்பட, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. கஞ்சா விற்பனை தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். சென்னை, நீலாங்கரையில் பதுங்கி இருந்த இவரை, அயனாவரம் காவல் நிலைய தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ய, ஆக., 21 காலை, கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில், முட்புதர் பகுதிக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்.அப்போது, அங்கு பதுக்கி இருந்த அரிவாளால், சங்கர், போலீசாரை வெட்டியதாக கூறப்படுகிறது. தற்காப்புக்காக, அயனாவரம், சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டத்தில், சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

என்கவுன்டர் முறையில், போலீசார் சுட்டுக்கொன்றதற்கு, சங்கரின் தாய் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொய் வழக்குகள் பதிவு செய்து, சங்கரை, போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டதாக, கோவிந்தம்மாள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், சங்கர் என்கவுன்டர் தொடர்பாக விசாரித்து வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் தனிப்படை போலீசார் என, 13 பேருக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரித்துள்ளனர்.அடுத்தகட்டமாக, சங்கரின் தாய் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா, இவரது மகன் மோகன், சங்கரின் அண்ணி உஷா ஆகியோரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்களது வீட்டில் விசாரணை நடத்தினர்.பின், சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து, வீடியோ பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X