தமிழ்நாடு

'டாண்'னு ஒன்னாம் தேதி! அரசு ஊழியர்களுக்கு சம்பளம்; சந்தேகம்தான் இந்த மாதம்!

Added : செப் 12, 2020
Share
Advertisement

அரசுத்துறையில் காகிதப்பயன்பாடு குறைப்பு, 'டிஜிட்டல்' மயமாக்கல் மற்றும் முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவையிலும் அறிமுகம்!
கரூர் மாவட்டத்தில் கடந்த, ஜன., 1ம் தேதி முதல் இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.கோவையில், மார்ச் மாதம் அமல்படுத்தப்படவேண்டிய இத்திட்டம், நிதியாண்டு முடிவு, வைரஸ் தொற்று போன்ற காரணங்களால், செயல்படுத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த, 1ம் தேதி முதல் கோவையிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சர்வரால் 'டர்ர்ர்...'ஆனால், சர்வர் பிரச்னை காரணமாக, பணம் பெற்று வழங்கும் அலுவலகத்திலுள்ள பணியாளர்கள், பல மணி நேரம் காத்திருந்து, தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டியுள்ளதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், சர்வர் மொத்தமாக முடங்கி விடுவதாகவும் புலம்புகின்றனர்.பழைய முறையிலும் சம்பள பில் தயாரித்து, அதனை புதிய இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பழைய முறையில் இருந்த, சில நடைமுறைகள் இதில் மாற்றப்பட்டுள்ளதால், கணக்கு சமன் செய்ய சிரமங்கள் உள்ளதாக, அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சம்பளம்...சந்தேகம்!குறிப்பாக, இரவு 7:00 முதல் 10:00 மணி வரை சர்வர் பயன்பாட்டுக்கு அனுமதிப்பதால், பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரிய வேண்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பணம் பெற்று வழங்கும் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கோவையில் இந்நடைமுறை புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், 15ம் தேதிக்குள் கணக்கு முடித்து தர கூறியுள்ளனர். ஆனால், சர்வர் சிக்கலால், பல மணி நேரம் காத்திருந்து, ஒரு சிறிய தகவலை பதிவேற்ற வேண்டியுள்ளது. கட்டாயம் இம்முறைப்படியே ஊதியம் வினியோகிக்கப்படும் என்பதால், இம்மாதம் ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமே' என்றார்.
கவலை வேண்டாம்
!இதுகுறித்து, மாவட்ட கருவூலத்துறை அதிகாரி ராஜாவிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:இத்திட்டம், 25 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் புதிதாக இணைந்துள்ளதால், துவக்கம் முதல் பட்டியல் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15ம் தேதிக்கு பிறகு, முன்பு செயல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் பணி துவக்கப்படும்.
பழைய முறைப்படி, 20ம் தேதி பில் கொடுத்து, 25ம் தேதி வங்கிக்கு அனுப்பி, 30ம் தேதி ஊதியம் கிரெடிட் செயயப்படும். ஆனால், இப்புதிய முறையில், 30ம் தேதி காலையில் சமர்ப்பித்தாலும், 3 மணி நேரத்தில், ஊதியம் வினியோகிக்கும் வசதி உள்ளது.ஆகவே, ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை. சம்பள பட்டியல் சமர்ப்பிக்க உரிய காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
சர்வர் சிக்கல் குறித்து, தலைமையிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறைகளாக தொடர்ந்து சரிசெய்து தரப்பட்டு வருகிறது. விப்ரோ தரப்பில் ஐந்து தொழில்நுட்ப அலுவலர்கள் உதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, கவலைப்படத்தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
இப்புதிய முறையில், 30ம் தேதி காலையில் சமர்ப்பித்தாலும், 3 மணி நேரத்தில், ஊதியம் வினியோகிக்கும் வசதி உள்ளது. ஆகவே, ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை. சம்பள பட்டியல் சமர்ப்பிக்க, உரிய காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.-ராஜா, மாவட்ட கருவூலத்துறை அலுவலர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X