திருமண உதவித்தொகை திட்டம்: 2700 பேர் புதிதாக விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமண உதவித்தொகை திட்டம்: 2700 பேர் புதிதாக விண்ணப்பம்

Added : செப் 12, 2020
Share

கோவை:திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை, 2,700 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், திருமண உதவித்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம், பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாயும், டிகிரி படித்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் தொகையும், இருவருக்கும் தாலிக்கு, 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.2018ம் ஆண்டு முதல் தற்போது வரை, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. புதிதாக, நடப்பாண்டில், 2,700 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.கடந்த மார்ச் முதல் மே இறுதி வரை, ஊரடங்கு காரணமாக இத்திட்டம் சார்ந்த செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு பின்பு, மே இறுதி முதல் மீண்டும் பணிகள் துவக்கப்பட்டன.இதுகுறித்து, சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழக்கம் போல், பெறப்பட்டு வருகின்றன. 2019 செப்., மாதம், 2,000 பேருக்கு நிதியும், தங்கமும் வினியோகிக்கப்பட்டது.தற்போது, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இணையதளம் வாயிலாக பணிகள் நடைபெறுவதால், சீனியாரிட்டி மாற்ற இயலாது. இதனால், பதிவு மூப்பு அடிப்படையில் அனைவருக்கும் நிதியுதவி கிடைக்கும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X