பொது செய்தி

தமிழ்நாடு

வைப்பாற்றை சோலையாக்க ஒருங்கிணைப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

சாத்துார் : கந்தகபூமியான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்துார் பகுதியில் சாலை விரிவாக்கம் போது நுாறு ஆண்டுகளுக்கு மேல் நிழல் தந்த புளிய மரம், ஈச்சமரம், பூவரசு, நாவல், விளாம் மரங்கள் வெட்டப்பட்டன.

இதனால் இங்கு வெப்பம் அதிகமாக மழை பெய்வதும் குறைந்து விட்டது. இதற்கு ஈடுகட்ட இளைஞர்கள் களம் இறங்கி உள்ளனர். சாக்கடை தேங்கி அழகு குறைந்திருக்கும் வைப்பாற்றை அழகுற செய்யவும் சபதம் எடுத்து குழு அமைத்து செயல்படுகின்றனர்.இவர்கள் வைப்பாறு மீட்பு குழு, தடம் அமைப்பு என அமைப்புகளை உருவாக்கி வைப்பாற்றங்கரையில் பனைமர விதைகளை விதைத்துள்ளனர். பெரியார் நகர், சுந்தரலிங்கம் நகர், நடராஜா தியேட்டர் ரோடு ஓரங்களில் நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்று நட்டு பராமரித்து வருகின்றனர்.

வீடுகளில் மரம் வளர்க்க விரும்பு பவர் களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி நட்டும் தருகின்றனர். தன்னலம் இல்லாமல் பொதுநலத்துடன் செயல்படும் இளைஞர்களை பாராட்ட 97508 98266.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X