பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டப்பயிர்களுக்கு சொட்டு நீர் :ரூ.3.29 கோடி மானியம் ஒதுக்கீடு

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:மதுக்கரை வட்டாரத்தில், 2020-21ம் நிதியாண்டில், 1,296 ஏக்கரில் தோட்டப்பயிர்கள் பயிரிடுவதற்கு, சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.3.29 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.விவசாயத்தை மேம்படுத்தவும், குறைந்த தண்ணீரில் வேளாண்மை செய்யவும், சொட்டு நீர் பாசனம் அமைக்க ஊக்கப்படுத்தப்படுகிறது. சிறு குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்தால், 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்து, ஏழு ஆண்டுகள் கடந்திருந்தால், உபகரணங்கள் மாற்றிக் கொள்ள, மீண்டும் மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், 2 புகைப்படங்களுடன், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுசிந்திரா தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு, 90952 46221, 97892 62163, 80723 99817 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X