பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:பால் சக்தி புரஸ்கார், பால் கல்யாண் புரஸ்கார் விருது பெற, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் தேசிய குழந்தைகள் விருது தற்போது,'பால் சக்தி புரஸ்கார், பால் கல்யாண் புரஸ்கார் விருது', என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பால் சக்தி புரஸ்கார் விருது, குழந்தைகள் தங்களின் தனித்துவமிக்க திறமையால், விளையாட்டு, கலை, வீரம், கலாசாரம், சமூக சேவை, கல்வியியல், போன்ற துறைகளில் சாதனை புரிந்ததற்காக, சான்றிதழ் மற்றும் 1,00,000 பரிசுத்தொகையும், பால் கல்யாண் புரஸ்கார் விருதானது, குழந்தைகள் முன்னேற்றம், பாதுகாப்பு, நல்வாழ்வு போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பு அளித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர் பிரிவுக்கு வழங்கப்படுகிறது.தனிநபர் பிரிவுக்கு, 1 லட்சம் ரூபாயும், நிறுவன பிரிவுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் பதக்கம், சான்றிதழும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.இவ்விரண்டு விருதுகளுக்கும், www.nca-wcd.nic.in என்ற இணையதளத்தில் 15ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் இறுதி நாளுக்கு பிறகு, பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X