சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை உள்ளது. இந்நிலையில், கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன், மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதேபோல், கோவை குனியமுத்துார் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த, 21 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X