பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் போக்குவரத்து மற்றும் சேமிப்பு கட்டணங்களை, மானியத்தில் பெற தகுதியுள்ள விவசாயிகள், நிறுவனங்கள், 'இ- அபியான்' இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:ஆத்மநிர்பார் பாரத் திட்டம் தமிழகத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக செயல்படுத்தப்படும்.விளைபொருட்களை சந்தைபடுத்த கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவில், 50 சதவீதம் மானியம், விளைபொருட்களை அதிகபட்சம், 3 மாத காலம் சேமிப்பு கிடங்குகளில் சேமிப்பதற்கான கட்டணத்தில், 50 சதவீதம் மானியம் வழங்குதல் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.உணவு பதப்படுத்துவோர், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், உரிமம் பெற்ற தரகு முகவர்கள், சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோரும் நிதியுதவி பெறலாம்.போக்குவரத்து கட்டண மானியமாக, சரக்கு வண்டி கட்டணம் கி.மீ.,க்கு 2.48 ரூபாயும், குளிரூட்டப்பட்ட வாகன கட்டணம் கி.மீ., 5 ரூபாயும் வழங்கப்படும். சேமிப்பு கட்டண மானியம் அதிகபட்சமாக, 3 மாத காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.பசுமை செயல்பாடு இயக்கத்தின் வழிகாட்டுதலின் படி, தகுதியுள்ளவர்கள், http://www.sampadamofpi.gov.in/Login.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.யார் பயன் அடையலாம்நெல்லி, வாழை, கொய்யா, மா, பப்பாளி மற்றும் சப்போட்டா போன்ற பழங்கள் மற்றும் கேரட், பீன்ஸ், வெங்காயம், தக்காளி, மரவள்ளி கிழங்கு மற்றும் தர்பூசணி போன்ற காய்கறி உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகம் செய்வோர், இத்திட்டத்தின் மூலம் மானியம் பெற்று பயனடையலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X