பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பப்பை புற்றுநோயா...

Added : செப் 12, 2020
Share
Advertisement

''கர்ப்பப்பை புற்றுநோயை எளிதில் குணப்படுத்தி விடலாம்; பெண்கள் பயப்பட வேண்டாம்,'' என்கிறார் சாய்பாபா காலனி பாபா கிளினிக் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் சுகன்யா.பெண்களுக்கு சினைப்பை நீர்கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன?அதிக உடல் எடை, உடற்பயிற்சி இல்லாமை, துரித உணவு அதிகம் உண்பது ஆகியவற்றால், பெண்களுக்கு உடல் பிரச்னைகள் உருவாகின்றன. இளம்வயது பெண்களுக்கு கர்ப்பப்பை அருகே உள்ள, சினைப்பையில் நீர்க்கட்டிகள்(Polyscystic Ovarian Disease-PCOD-) தோன்ற இதுவே காரணம். இதனால் மாதவிடாயின்போது, உதிரப்போக்கு அதிகரிக்கும் அல்லது குறையும். மாதவிடாய், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். நீர்கட்டிகள் திருமணத்துக்கு முன்போ, 40 வயதுக்கு பிறகோ வரலாம்.இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் தோன்றலாம். 40 அல்லது, 50 வயதுக்குப் பிறகு, கர்ப்பப்பை புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளது.கர்ப்பப்பை புற்றுநோய் யாரை தாக்கும்? அறிகுறிகள் என்ன? இது, 45 முதல், 55 வயது வரையுள்ள பெண்களையேஅதிகம் தாக்குகிறது. உடல் பருமன், சர்க்கரை நோய், நீர்கட்டிகளை நீண்டநாட்கள் கவனிக்காமல் விடுவது ஆகியவை காரணங்கள். தாய், பாட்டிக்கு இருந்தால் மகளுக்கு வர வாய்ப்புண்டு.உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மாதம் ஒரு முறை வந்தாலும், சிலருக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு தினந்தோறும் வெளிப்படும். இல்லாவிட்டால், 15 நாட்களுக்கு ஒருமுறை வெளிப்படும். இந்நோய் தீவிரமடைந்து இருந்தால், உடல் எடை குறையும், பசியின்மை இருக்கும். கர்ப்பப்பை புற்றுநோய்க்கு என்ன சிகிச்சை?முதல், இரண்டாம் நிலையில், அதன் தன்மையை பொறுத்து அறுவையால் குணப்படுத்தலாம். மூன்று, நான்காம் நிலைகளின் போது, கீமோதெரபி சிகிச்சையால் சரிப்படுத்தலாம். மற்ற புற்றுநோய்களை காட்டிலும், கர்ப்பப்பை புற்று நோயை எளிதில் குணப்படுத்தலாம்.மார்பக புற்றுநோய் வர காரணம் என்ன? தடுப்பது எப்படி?உடலில் அதிக கொழுப்பு இருப்பதே மார்பக புற்றுநோய் வரக்காரணம். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு தவிர்த்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்து, உரிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், மார்பக புற்றுநோய் வராது. பெண்கள் தங்கள் மொத்த உயரத்தில், 100 செ.மீ., கழித்தால், மீதமுள்ள செ.மீ., அளவில் உடல் எடை இருக்க வேண்டும்.பெண்களே சுயமாக மார்பக புற்றுநோயை கண்டறிய இயலுமா?மார்பகத்தில் உள்ள எல்லா கட்டிகளும், மார்பக புற்றுநோய் கட்டிகளாக இருக்க வாய்ப்பில்லை. மார்பகத்தை நான்காக பிரித்து, ஒவ்வொரு கால்பகுதியிலும், பெண்களே, கைகளை வைத்து அழுத்திப் பார்க்க வேண்டும். கட்டிகள் உட்புறமாக தசையுடன் ஒட்டி இருப்பது போன்று கடினமாக இருத்தல், மார்பகம் சிவந்து காணப்படுதல், காம்புகளில் ரத்தம் அல்லது பால் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், புற்றுநோயாக இருக்க வாப்புண்டு.பயப்படாமல் உரிய மருத்துவ பரிசோதனை செய்து, உறுதிப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.கர்ப்பப்பைவாய் புற்றுநோயை எவ்வாறு தெரிந்து கொள்வது?பெண்கள் சிலருக்கு, 45 வயதுக்கு பிறகும் மாதவிடாய் தொடரும். மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிதான் இது என, கவனக்குறைவாக இருக்கக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி, 'பாப்ஸ்மியர்' சோதனை செய்து கொள்ளலாம். இதை தடுக்க, தற்போது தடுப்பூசிகள் வந்துள்ளன. 25 வயது முதல், 45 வயது வரையுள்ள பெண்கள் போட்டுக் கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X