சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு ெகாரோனா தொற்றில்லை

Added : செப் 12, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகி உள்ளது.நாளை பார்லி குளிர்கால கூட்டம், தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது.

இதில், பங்கேற்கும் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து, அதற்கான சான்றுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என தெரிவித்து விட்டனர். இதையடுத்து, எம்.பி., கார்த்தி, அமைச்சர் பாஸ்கரன், எம்.எல்.ஏ.,க்கள் மானாமதுரை நாகராஜன், திருப்புத்துார் பெரிய கருப்பன், காரைக்குடி கே.ஆர்., ராமசாமி ஆகியோருக்கு சளி மாதிரி சேகரித்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனை மைக்ரோபயலாஜி துறையில் பரிசோதனை செய்தனர்.

முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் சிவகங்கை எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்தனர். பார்லி., சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மக்கள் பிரதிநிதிகளுக்கு எவ்வித தடையும் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X