பொது செய்தி

தமிழ்நாடு

'வைரஸ் தொற்றை துரத்தும் 15 வகையான யோகா பயிற்சி'

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:நீண்ட நாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி மையம், யோகா மையம், விளையாட்டு மைதானங்கள் திறக்கலாம் என, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாணவ, மாணவிகளும் கட்டுப்பாடுகளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது, பேருந்து, ரயில்கள் இயக்கப்படுவதால், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறைந்து விட்டது. இதன் மூலம் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்நிலையில், உயிர்கொல்லி நோயிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தினமும், 15 வகையான யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, யோகா பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, யோகா பயிற்சியாளர் சிவகாமி கூறியதாவது:உலகம் முழுவதும் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தை காக்க மக்கள் போராடி வருகின்றனர். யோகாவே இதற்கு தீர்வு. இந்த தொற்று நோயிடம் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள, தனுராசனம், சர்வாங்காசனம், உத்தானபாதா ஆசனம், நாடி சுத்தி பிராணாயாமம், உஷ்ட்ராசனம், பிராமரி பிராணாயாமம், நாசிகளை சுத்தம் செய்யும் பயிற்சி, பவனமுக்தாசனம், சலபாசனம், மக்கராசனம், மேரு வக்ராசனம், திரிகோணாசனம், கோமுகாசனம், தடாசனம், நாசிகளை சுத்தம் செய்யும் பயிற்சி மேற்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X