பொது செய்தி

தமிழ்நாடு

அறிகுறி இல்லாதோருக்கு மருந்து 'கிட்' வழங்கல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கையில் கொரோனா அறிகுறியின்றி தொற்று உறுதியாவோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆகஸ்ட்டில் அதிகரித்திருந்தது. படிப்படியாக இவை குறைந்து வருகிறது. ஆக.,ல் நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 பேர் தொற்றுடன் வந்த நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பேர் தொற்றுடன் வருவது குறைந்துள்ளது. தொற்று உறுதியாவோருடன், பூரண குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கை சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து விட்டன. இது தவிர கொரோனா அறிகுறியின்றி, தொற்று உறுதியாவோரை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் வைத்து, சுகாதாரத்துறை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

தொற்றுடன் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆவோர். தொற்றின்றி வீட்டில் தனிமையில் இருப்போருக்கு இலவச மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 2500 மருந்து பெட்டகம் வந்துள்ளது. அதில், வீட்டு தனிமையில் உள்ள 1216 பேர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கியுள்ளனர். இது தவிர சிவகங்கை அரசு மருத்துவ மனையில் இருந்து குணமடைந்து செல்வோருக்கும் கொரோனா மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தொற்று மேலும் பரவாமல் இருக்க, அரசு பாதுகாப்பு கவச பெட்டகத்தை வழங்கி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X