பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் நியமனம் தாமதம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

காரைக்குடி : சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாக்கவயல் ஊராட்சியில் 5 வருடங்களாக ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ளதால் எந்த பணியும் நடப்பதில்லை.

இங்குள்ள ஊராட்சியில் செயலர் பதவி நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. அருகில் உள்ள மித்ராவயல் ஊராட்சி செயலர் தான் கூடுதல் பணியாக கவனித்து வருகிறார். ஊராட்சி செயலர் பணிக்கு தேர்விற்காக விண்ணப்பித்து ஓராண்டாகியும், பணி நிரப்பப் படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.செல்லையா கூறுகையில்; சாக்கவயல் ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்காக 2019 நவம்பரில் பலர் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பித்து ஓராண்டாகியும், இதுவரை பணியிடம் நிரப்பப்படவில்லை. பணிநியமனத்தில் பல்வேறு, முறைகேடு நடப்பதற்கான வாய்ப்புள்ளது.

அருகில் உள்ள மற்ற ஊராட்சிகளுக்கு நேர்முகத்தேர்வு அழைப்பு வந்த நிலையில், இந்த ஊராட்சி செயலர் பணியிடம் மட்டும் நிரப்பப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். என்றார்.பி.டி.ஓ., திருப்பதிராஜன் கூறுகையில்;ஊராட்சி செயலர் பணிக்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கலெக்டரின் அனுமதி பெற்று நேர்முகத்தேர்வு விரைவில் நடைபெறும். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X