பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே மகனையும் விமானப்படைக்குஅனுப்பி வைத்த தாய்க்கு பாராட்டு

Added : செப் 12, 2020
Share
Advertisement

காரைக்குடி : காரைக்குடியில், தனது ஒரே மகனையும் விமானப்படைக்கு அனுப்பி வைத்த தாய் வெள்ளிப் பதக்கம் அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.

காரைக்குடி அருகே உள்ள பிளார் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பையா - காந்திமதி தம்பதி. இவர்களுக்கு மணி என்ற மகன் 1955ல் பிறந்தார். மகன் பிறந்த இரண்டே வருடத்தில் கணவரை இழந்த காந்திமதி தனது ஒரே மகனை தன்னுடன் வைத்துக் கொள்ளாமல், நாட்டின் சேவையையே உயர்வாக கருதி இந்திய விமானப்படைக்கு அனுப்பி வைத்தார். எம்.ஜி. ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு காந்திமதியை பாராட்டி தமிழக அரசு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை தமிழ்நாடு உதவி இயக்குனர் வரதராஜன், காந்திமதிக்கு அரசின் சார்பில் வெள்ளிப்பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X