தமிழ்நாடு

கடற்கரைக்கு வராதீங்க: அபராதம் விதிக்குது போலீஸ்!

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடற்கரை, அபராதம் , போலீஸ்

மெரினா : தடையை மீறி மெரினா கடற்கரைக்கு வந்தவர்கள் மீது, காவல் துறையினர், மாநகராட்சியுடன் இணைந்து, அபாரதம் விதித்து வருகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் முதல், அரசு ஊரடங்கு அமல்படுத்தியது. மக்கள் நலன் கருதி, அவ்வப்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.அறிவிப்புசெப்., 1ம் தேதி முதல், நிபந்தனைகளுடன், கோவில், பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்த முழு ஊரடங்கையும் அரசு தளர்த்தியது.

ஆனால், சென்னையில், மெரினா கடற்கரை உட்பட சுற்றுலா தலங்களில், மக்கள் கூட தடை நீடிக்கிறது.காவல் துறை மற்றும் மாநகராட்சி சார்பில், கடற்கரை மணற்பரப்பிற்கு செல்ல தடை நீடிப்பதால், யாரும் செல்ல கூடாது என, ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தடையை மீறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மெரினா கடற்கரைக்கு, ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்க குடும்பத்துடன் வந்தனர்.


அறிவுரை


அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கடற்கரைக்கு செல்ல தடை உள்ளது என, அவர்களுக்கு அறிவுரை கூறி, திருப்பி அனுப்பினர்.ஆனால், அவர்கள், வீட்டிற்கு செல்லாமல், கலங்கரை விளக்கம் அடுத்து அணுகு சாலையில் உள்ள, சாந்தோம், பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் அமர்ந்து, குடும்பத்துடன் பொழுதை கழித்தனர். வார நாட்களிலும் இதே நிலை நீடித்தது.

இதனால், அணுகு சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், புதிதாக கடைகள் முளைத்து, குட்டி மெரினாவாக மாறியது. இது குறித்து எழுந்த புகாரை அடுத்து, நேற்று காலை முதல், காவல் துறையினர், மாநகராட்சியுடன் இணைந்து, தடையை மீறி கடற்கரை மணற்பரப்பிற்கு செல்பவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தடையை மீறி, கடற்கரைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடற்கரைக்கு வருவோர் அதிகரிக்கலாம் என்பதால், இன்றும் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்க, போலீசார் ஆயத்தமாக உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-202010:01:39 IST Report Abuse
ஆப்பு பொருளாதாரம் ஊத்திக்கிச்சு. gst தொகுப்பிலிருந்தும் நிதி வருவதில்லை. இனிமே இப்பிடி கண்டதுக்கெல்லாம் அபராதம் போட்டு, உதைத்து வசூல் பண்ணி, பொருளாதாரத்தை ஒசத்துவதில் பிரதமருக்கு 5 டிரில்லியன் இலக்குக்கு உதவுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X