சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டிக்கு வர்றாராம் 'வி.வி.ஐ.பி.,' இரு தலைமுறை கண்ட மரங்கள் 'கசாப்'

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஊட்டிக்கு வர்றாராம் 'வி.வி.ஐ.பி.,'  இரு தலைமுறை கண்ட மரங்கள் 'கசாப்'

அன்னூர்:அன்னூரில், இரு தலைமுறைகளாக இருந்து வந்த 4 மரங்கள், வெட்டி சாய்க்கப்பட்டன.அவிநாசியில் இருந்து, அன்னூர் வழியாக, மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், நான்கு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:அன்னூர், அவிநாசி ரோட்டில், நாகமாபுதூரில், 40 ஆண்டுகள் ஆன புளியமரம் நேற்று முன்தினம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதேபோல் மேட்டுப்பாளையம் ரோட்டில், ஆயிமாபுதூர் பிரிவில் 30 அடி உயரமும், 20 அடி அகலமும் கொண்ட புளியமரம் நேற்று வெட்டப்பட்டது.மயானத்தை ஒட்டி ரோட்டில் இருந்த ஒரு மரம், எதிர்ப்புறம் ஒரு மரம் என நான்கு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இவை, இரண்டு தலைமுறை தலைமுறையாக பலன் தந்து வந்தவை.அதிகாரிகளிடம் கேட்டபோது, ' இந்த மரங்கள் காய்ந்து, எந்த நேரத்திலும் விழும் அபாயமுள்ளது. ஊட்டிக்கு அடுத்த வாரம் வி.வி.ஐ.பி., செல்ல உள்ளார். எனவே, பாதுகாப்பு கருதி வறண்டு போன மரங்களை வெட்டுவதாக கூறினர்' என்றனர்.அன்னூர் நகரிலும், கணேசபுரத்திலும் இடையூறாக இருக்கும் மரங்களுக்கு கீழ் சிலர் ஆசிட் ஊற்றி, குப்பைக் கொட்டி தீ வைத்து, காய்ந்து போகச் செய்கின்றனர்.
அதன் பின், அதிகாரிகளிடம் பேசி, அம்மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அனுமதி பெறுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மரங்கள் வெட்டப்படுவது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவத்தை இருமுறை தொடர்பு கொண்டும், நமது போன் அழைப்பை அவர் ஏற்கவில்லை.அன்னூர் நகரிலும், கணேசபுரத்திலும் இடையூறாக இருக்கும் மரங்களுக்கு கீழ் சிலர் ஆசிட் ஊற்றி, குப்பைக் கொட்டி தீ வைத்து, காய்ந்து போகச் செய்கின்றனர். அதன் பின், அதிகாரிகளிடம் பேசி, அம்மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அனுமதி பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-202015:04:59 IST Report Abuse
ஆப்பு ஆமா... அந்த வி.ஐ.பி வந்தா மரங்கள் நடந்து வந்து அவரைப் போட்டு சாத்திரும். அதனால் அடியாள் அதிகாரிங்க வந்து முன்னெச்சரிக்கை யா வெட்டிட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X