பொது செய்தி

தமிழ்நாடு

'முககவசம் அணியாதவர்களிடம் ரூ.2.65 லட்சம் அபராதம் வசூல்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:"முக கவசம் அணியாதவர்களுக்கு, 2.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்காத கம்பெனிகளுக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்," என, நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் சமீப காலமாக பலர், முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுகின்றனர்.இது குறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் கூறியதாவது:மாவட்ட நிர்வாகம் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது. இருந்த போதும் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம், 200 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படுகிறது. இதுவரை, 2.65 லட்சத்து ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால், 500 ரூபாயும், சமூக இடைவெளி பின்பற்றாமல் உள்ள நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X