சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் கட்டடத்திற்கு 'சீல்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டடத்திற்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

சென்னை, திருவொற்றியூர் மண்டலம், நான்காவது வார்டு, பிருந்தாவன் நகர், பிரதான சாலையில், இந்திராசண்முகம், 52, என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில், தரைத்தளம் மற்றும் முதல் தளம் என, 2,200 சதுர அடியில், கட்டடம் கட்டி வருகிறார்.இக்கட்டடத்திற்கு, கட்டடம் மற்றும் திட்ட அனுமதி ஏதும் பெறவில்லை.

விதிகளுக்கு மாறாக, பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாமல், கட்டுமான பணி நடந்துள்ளது. இது குறித்து, பலமுறை அறிவுறுத்தியும், உரிமையாளர் கண்டுக்கொள்ளவில்லை.மாநகராட்சி கமிஷனர் உத்தரவுபடி, அதிகாரிகள் குழுவினர், விதிகளை மீறி கட்டிய, 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டடத்திற்கு, சீல் வைத்தனர்.

எண்ணுார் காவல் ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மண்டலம் முழுவதும், உரிய அனுமதி பெறாத கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சீல் வைக்கும் பணி தொடரும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X