சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி தோசை சுட்டு தராததால் கணவர் தீக்குளித்து தற்கொலை

Added : செப் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 மனைவி தோசை சுட்டு தராததால் கணவர் தீக்குளித்து தற்கொலை

குன்றத்துார் : குன்றத்துார் அருகே, மனைவி தோசை சுட்டு தராததால், கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 66; குடிப்பழக்கம் கொண்டவர். தினமும் குடித்து, மனைவியிடம், பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, குடித்துவிட்டு வந்தவர், மனைவியிடம் பணம் கேட்டதோடு, தோசை சுட்டு தருமாறு கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அவரது மனைவி கோபித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

மனைவி தோசை சுட்டு தராததால், ரவிச்சந்திரன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார். குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-202023:15:57 IST Report Abuse
theruvasagan எந்த காரணமாக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ளுபவர்கள் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அப்படியே இறந்து போனவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் அரசு வழங்கவேண்டும்இப்படிக்கு பிரதான எதிரிக்கட்சி.
Rate this:
Cancel
13-செப்-202015:01:21 IST Report Abuse
ஆப்பு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. டாஸ்மாக்குக்கு ஒரு குடி மகன் நஷ்டம்.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-செப்-202010:24:10 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சுடலை முதல்வரானால் தோசை சுடுவதற்கு தடைவிதிப்பாரோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X