சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் காவலாளியை வெட்டி நகை, பொருட்கள் கொள்ளை

Added : செப் 12, 2020
Share
Advertisement
 கோவில் காவலாளியை வெட்டி நகை, பொருட்கள் கொள்ளை

செங்குன்றம் : அம்மன் கோவில் காவலாளியை வெட்டி, தங்க தாலி மற்றும் பொருட்களை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சென்னை, செங்குன்றம் புறவழிச்சாலையில், தனியார் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.அதில், செங்குன்றம், புள்ளிலைன், கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன், 66, காவலாளியாக பணிபுரிகிறார்.நேற்று அதிகாலை, 1:00 மணி அளவில், மூன்று மர்ம நபர்கள், கோவிலின் நுழைவு வாயில் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்தனர்.சத்தம் கேட்டு கண்விழித்த முருகன், அவர்களை விரட்ட முயன்றார். அப்போது, அவர்கள், முருகனை கத்தியால் வெட்டினர். அதில், அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் இருந்த, 1 சவரன் தாலி, கோவில் பயன்பாட்டிற்கான விளக்கு உள்ளிட்ட, 20 கிலோ பித்தளை பொருட்களை கொள்ளை அடித்தனர்.மேலும், உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தையும் அள்ளிச்சென்றனர்.

நேற்று காலை, 7:00 மணி அளவில், கணவருக்கு டீ வாங்கிச் சென்ற, முருகனின் மனைவி குப்பம்மாள், ரத்த காயத்துடன், மயங்கி கிடந்த கணவர் குறித்து, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, முருகன், பாடியநல்லுாரில் உள்ள, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X