பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவிக்கு தனியார் கல்லூரியில் இலவச இன்ஜி., கல்வி

Added : செப் 12, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்;வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு, வி.ஐ.டி., இன்ஜினியரிங் கல்லூரியில், இலவசமாக படிக்க இடம் கிடைத்துள்ளது.காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், 850 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மாவட்டம் தோறும் பிளஸ் டூ பொதுத் தேர்வில், அறிவியல் பாடப் பிரிவில், முதலிடம் பெறும் மாணவர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், இலவச கல்வி வழங்கப்படுகிறது.இன்ஜினியரிங் பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளுக்கு, எவ்வித கல்வி கட்டணமும் வசூல் செய்யாமல், இலவசமாக கல்வி அளிக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, ஹரிப்பிரியா என்ற மாணவி, இலவசக் கல்விக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவியை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X