பொது செய்தி

தமிழ்நாடு

காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க 2 கும்கி யானைகள் வருகை

Added : செப் 12, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், காலில் காயத்துடன் சுற்றும் ஆண் யானைக்கு, சிகிச்சை அளிக்க இரண்டு கும்கி யானைகள் வருகின்றன.மேட்டுப்பாளையம் வன சரகம், நெல்லித்துறை வனப்பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க, ஆண் யானை, காலில் காயத்துடன் நடக்க முடியாமல் சுற்றி வருகிறது. யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்படவுள்ளன.இதுகுறித்து, கோவை மாவட்ட வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார் கூறியதாவது:வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, மயக்க ஊசி செலுத்தி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக வனத்துறை டாக்டர் சுகுமார், தேக்கம்பட்டி கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் அடங்கிய, மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.நெல்லிதுறை வனப்பகுதியில், யானை நடமாட்டத்தை அறிந்து, அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட உள்ளது. அப்போது யானை கீழே விழாமல் இருக்க, சாடிவயல் இருந்து சுயம்பு, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கலிம் ஆகிய, இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளன. நாளை (இன்று), வனப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.இவ்வாறு, டாக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X