பொது செய்தி

இந்தியா

சர்வ தரிசன டோக்கன்கள் தற்காலிக நிறுத்தம் விரைவு டிக்கெட்டுகள் கூடுதலாக வெளியீடு

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருப்பதி:திருமலை ஏழுமலையான் தரிசனத்தில், எப்போதும், சர்வதரிசன பக்தர்களுக்கே தேவஸ்தானம் முக்கியத்துவம் அளித்து வருவதாக தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

திருமலையில், கோவிட் 19 விதிமுறைகளுக்கு பின், தேவஸ்தானம் ஜூன் மாதம் முதல் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் அளித்து வருகிறது. முதலில், ஆன்லைன் வாயிலாக, விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்ட தேவஸ்தானம் பின், மிக குறைந்த எண்ணிக்கையில், திருப்பதியில் சர்வதரிசன நேரடி டோக்கன்களை அளிக்க துவங்கியது.எனவே, முன்பதிவு செய்யாமல் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், இவற்றை பெற்றனர்.


சமூக இடைவெளி

தற்போது, புரட்டாசி மாதம் துவங்க உள்ள நிலையிலும், தமிழகத்தில் பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளதாலும், பக்தர்கள் அதிக அளவில் திருமலைக்கு வர துவங்கிஉள்ளனர். திருப்பதியில் உள்ள கவுண்டர்களில், தேவஸ்தானம், 3,௦௦௦ டிக்கெட்டுகளை மட்டுமே அளித்து வருகிறது.

ஆனால், 10ஆயிரம் பக்தர்கள் வரை, இந்த டோக்கன்களை பெற, சமூக இடைவெளியை பின்பற்றாமல் காத்திருக்கின்றனர்.இதனால், திருப்பதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என, பலர் எச்சரித்ததால், சர்வதரிசன, நேரடி தரிசன டோக்கன்கள் அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டோக்கன்களுக்கு பதிலாக, தேவஸ்தானம், 3,௦௦௦ விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் கூடுதலாக வெளியிட்டுள்ளது.


13 ஆயிரம் டிக்கெட்டுகள்

தற்போது, ஆன்லைன் வாயிலாக, 13 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சர்வதரிசன பக்தர்களுக்கு, தேவஸ்தானம் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என, பக்தர்களை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X