சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 'நீட்' தேர்வுக்கு தயாரான மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை

Added : செப் 12, 2020
Share
Advertisement
  மதுரையில் 'நீட்' தேர்வுக்கு தயாரான மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை

மதுரை : மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு இன்று (செப்.,13) நடக்கும் நிலையில், 'எல்லோரும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். என்னால் வெற்றி பெற முடியுமா' என தேர்வு பயத்தால் கடிதம் எழுதியும், ஆடியோ பதிவிட்டும் மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் போலீஸ் எஸ்.ஐ., முருகசுந்தரம் மகள் ஜோதி ஸ்ரீதுர்கா 19, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் கடந்தாண்டு 'நீட்' தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறவில்லை. இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் எனக்கருதி முழு நேரமாக தேர்வுக்கு தயாரானார். நேற்றுமுன்தினம் இரவு ஒருமணி வரை படிக்கப் போவதாக கூறி அறைக்கு சென்றவர், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நான் செல்கிறேன் அப்பாஅவர் எழுதிய கடிதத்தில் இருப்பதாவது:அப்பா மறக்காம செக்கப்புக்கு போங்க. நீங்களும், மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருங்கள். அது உங்களால் மட்டும்தான் முடியும். நான் செல்கிறேன் அப்பா. நான் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.

அதற்கு நேரமில்லை. ஸ்ரீதர்(தம்பி) உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை மன்னித்து விடு. நீதான் சிறந்த சகோதரர். நான் ஒரு கோழை. உனது அன்புக்கும், மரியாதைக்கும் தகுதி இல்லாதவள். அம்மா, அப்பாவை நன்றாக பார்த்துக் கொள். அவர்களுடன் நீ மட்டும்தான் இருக்கே. நீ சோகமாக இருந்தால் அவர்களும் சோகமாகிவிடுவார்கள். நீ பெரியவனாகி விட்டாய். உயர்கல்விக்கு செல்கிறாய். நன்றாக படி. 'செல்போனில்' கேம் விளையாடதே, அப்புறம் அதற்கு அடிமையாகி விடுவாய். முட்டாள்தனமாக எதையும் வீணடித்து விடாதே. எனக்கு பயமாக இருக்கிறதுதேவிகா(சகோதரி) நீ என்னை அதிகமாக நேசித்தாய். எனக்கு ஆதரவாய் இருந்தாய். உன்னை விட்டு செல்வதற்கு என்னை மன்னித்துவிடு. நான் உண்மையில் நன்றாக படித்தேன்.

ஆனால் பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருப்பேன். இது யாருடைய தவறும் இல்லை. யார் யாரையும் குற்றம் சாட்டி கொள்ளாதீர்கள். அம்மா நீதான் என் நண்பர். மாமா, அத்தை, தாத்தா, பாட்டி அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். என் மேல் நீங்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள். ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காவிட்டால் உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகி இருக்கும்.இவ்வாறு குறிபிட்டுள்ளார்.ஐ எம் ஸாரி அவர் பேசிய ஆடியோவில், 'யார் யாரையும் குற்றம்சாட்டாதீங்க. யாருடைய தப்பும் இல்லை.

என்னதான் நான் படிச்சாலும் பயமா இருக்கு. பெயிலாகி விடுவேனோனு பயமா இருக்கு. ஒருவேளை 'சீட்' கிடைக்கலைனா நீங்க எல்லோரும் ஏமாந்திடுவீங்க. ஸாரி அப்பா, ஸாரி அம்மா. டாட்டா. நீங்க சோகமா இருக்காதீங்க. ஸ்ரீதர் இருக்கான். அவனோட எதிர்காலத்திற்காக நீங்க சோகமா இருக்கக்கூடாது. அவனை நல்லா படிக்க வையுங்க. பாய்டா ஸ்ரீதர். ஐ எம் ஸாரி. ஐ லவ் யூ. ஸாரி அப்பா. ப்ளீஸ்... உங்க ெஹல்த்தை நல்லா பார்த்துக்கோங்க. நீங்க ஹார்ட் பேஷன்ட். என்னை பற்றி ரொம்ப கவலைப்படாதீங்க. ஐ எம் ஸாரி' என பேசியுள்ளார்.இவரது உடல் நேற்று மதியம் தத்தனேரியில் தகனம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலையை தொடர்ந்து 'நீட்' தேர்வை ரத்துசெய்யக்கோரி மதுரையில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அமைச்சர் அஞ்சலிஅரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு அமைச்சர் உதயகுமார் அஞ்சலி செலுத்தினார்.

குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வு மட்டுமே எதிர்காலம் அல்ல. எதையும் தைரியமாக எதிர்கொண்டால் வெற்றி பெறலாம். மதுரை பார்வையற்ற மாணவி பூரண சுந்தரி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று உலகப்பார்வையை தன்பால் இழுத்தார். இவர் தொடர்ந்து தோல்வியை சந்தித்து 4வது முறையாக வெற்றி பெற்றார். மாணவர்கள் நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி பெறலாம். நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு வேண்டி அரசு சார்பில் தொடர்ந்து உரிமை குரல் எழுப்பி வருகிறோம். நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது, என்றார்.

ஒரு கணம் யோசித்தால் எக்கணமும் தற்கொலை இல்லைn பெற்றோரே... உங்கள் பொன்னான நேரத்தை பிள்ளைகளுக்கும் கொஞ்சம் தாருங்கள். அவர்களின் பிரச்னை, எண்ண ஓட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் மூழ்கி எங்கோ இருப்பவர்களுக்கு வாழ்த்து பகிர்வதை விட பக்கத்தில் இருக்கும் பிள்ளைகளின் பிரச்னைகளை கண்டறிந்து களைவது முக்கியம். தங்களின் விருப்பு, வெறுப்புகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்.n ஆசிரியர்களே... மாணவர்களை புத்தகப்புழுக்களாக மாற்றாமல், பாடங்களுக்கு அப்பாற்பட்ட வாழ்வியலையும் கற்பியுங்கள். உடல், மன நலனை அறிந்திருங்கள்.

மன இறுக்கத்தில் தவிக்கும் மாணவர்களை தனியாக அழைத்துப் பேசுங்கள். உங்களின் வார்த்தைகள் அருமருந்தாகும். இன்றைய காலக்கட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்துவோரும், தினசரி குறிப்பிட்ட நேரத்தை மனநலனுக்கு ஒதுக்குவது நல்லது.n மாணவர்களே... தன்னம்பிக்கை என்ற 3வது கையை ஒருபோதும் இழக்காதீர்கள். மனநலன் குன்றியவர்களுக்கு கூட ஏதோ ஒரு திறமை இருக்கும். உங்களுக்கான தனித்திறமையை கண்டறிந்து, அது சார்ந்த துறையை தேர்வு செய்து படியுங்கள்.

விருப்பு, வெறுப்புகளை பெற்றோரிடம் தைரியமாக எடுத்துக் கூறுங்கள். எதையும் மனதில் வைத்து புழுங்க வேண்டாம். தோல்விகள் நிரந்தரமற்றவை. தொடர்ச்சியான போராட்டம் அவற்றை மாயத்து வெற்றிகளை பிரசவிக்கும். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல. அரைக்க, அரைக்கத்தான் சந்தனம் மணக்கும். உழைக்க, உழைக்கத்தான் வாழ்க்கை இனிக்கும். ஒரு கணம் யோசித்தால் எக்கணமும் தற்கொலை இல்லை.-டாக்டர் ராமசுப்பிரமணியன் மனநல நிபுணர், மதுரைஉதவிக்குமதுரையில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் அகானா மருத்துவமனை சார்பில் மனநல ஆலோசனை உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. தோல்வி பயம், மன துயரம், தற்கொலை எண்ணத்தில் தவிப்போர் இம்மையத்தை நாடலாம். அலைபேசி 90060 06000.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X