அரசியல் செய்தி

தமிழ்நாடு

நொய்யல் ஆற்றில் கழிவு நீரை தடுக்க மாவட்ட பா.ஜ., தீர்மானம் 

Added : செப் 12, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:கோவையில் நொய்யல் மற்றும் குளங்களில் கலக்கும் கழிவு நீரை தடுத்து, மறு சுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பா.ஜ., கோவை மாநகர், மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கவுண்டம்பாளையத்தில் நடந்த கூட்டத்துக்கு மாநகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கோவையில் உழவர் சந்தையில் உழவர் அல்லாதவர்கள் வியாபாரம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடாகம் ரோடு, இடையர்பாளையம் நான்கு கார்னர் சந்திப்பில் விபத்துக்களை தடுக்க, உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்.தமிழ்நாடு வீட்டு வாரியம் சார்பில், துடியலுார், சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து, கையகப்படுத்தப்பட்ட நிலம் தரிசாக கிடக்கிறது. அதை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க, மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X