பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக சட்டசபை பணி நிறைவு

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:கலைவாணர் அரங்கில், தற்காலிக சட்டசபை அமைப்பதற்கான பணிகள் முடிந்த நிலையில், ஒலிபெருக்கிகள் சரிபார்ப்பு பணி துவங்கியுள்ளது.

சென்னை சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில், சட்டசபை கூட்டம் நாளை துவங்கவுள்ளது. இதற்காக, இங்குள்ள மூன்றாவது தளத்தில், தற்காலிக சட்டசபை அமைக்கும் பணியை, பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வந்தனர். சட்டசபையில் உள்ளது போல, ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும், இரண்டு திசைகளிலும் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, அரங்கின் தரையில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, அதன்மேல் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலா,4 அடி இடைவெளி விட்டு அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொற்று பரவுவதை தடுப்பதற்காக, அனைவருக்கும் தனித்தனியாக 'மைக்' வசதி செய்யப்பட்டு உள்ளது.சபையில் அனைவருக்கும் கேட்கும் வகையில், ஆங்காங்கே ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. கூட்ட அரங்கின் கூரைப் பகுதியில், குளிர்சாதன வசதிக்கு மாற்றாக, சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

இரண்டாவது தளத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கும், தரை தளத்தில் எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்கள், பத்திரிகையாளர்கள், மீடியாக்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.கொரோனா தொற்று இல்லை என்ற, சான்று பெற்றவர்கள் மட்டுமே, மூன்றாவது தளத்திற்கு செல்லும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன..

\தரை தளத்திலேயே அனைவருக்கும், காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன.இதனிடையே, நேற்று முதல், மைக் மற்றும் ஒலிபெருக்கிகள், கேமரா பதிவுகள் சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X