பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் உதவி திட்ட முறைகேடுவேளாண் அதிகாரி இடமாற்றம்

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:பிரதமர் உதவித்தொகை திட்ட முறைகேடு குறித்து, விசாரணை நடந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் உட்பட, 13 மாவட்டங்களில், பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தில், முறைகேடு நடந்துள்ளது. விவசாயிகள் அல்லாத ஐந்து லட்சம் பேர், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது.

நான்கு உதவி இயக்குனர்கள் உட்பட, 34 வேளாண் துறையினர்; 80 ஒப்பந்த பணியாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, பணத்தை திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை கவனித்து வந்த, விழுப்புரம் வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட வேளாண் துணை இயக்குனராக, உழவர் பயிற்சி நிலையத்தில், அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
13-செப்-202009:15:17 IST Report Abuse
Ramachandran Rajagopal அரசு பணத்தை சூறையாட வழிவகுத்து அதன்மூலம் பயனடைபவர்களை விசாரணையின்றி பணி நீக்கம் செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலை நீக்கம் செய்து குற்றவியல் வழக்கு தொடர்ந்து தண்டிப்பதற்கு பதிலாக அவர்களை இடமாற்றம் செய்து குற்றங்களைத் தொடர வழிவகுக்கின்றன அவர் சட்ட விரோத வருவாயில் பங்கு உண்டு என்பதால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X