சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனித்தேர்வரின் உதவியாளருக்கும் கொரோனா பரிசோதனை

Added : செப் 12, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்திருந்தால் மட்டுமே தனித்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனித்தேர்வர்களுக்கு செப்டம்பரில் தேர்வு நடக்க உள்ளது. பத்தாம் வகுப்பிற்கு செப்.21 முதல் 26 வரை, பிளஸ் 1 க்கு செப்.29 முதல் அக்.7 வரை, பிளஸ் 2 க்கு செப்.21 முதல் 28 வரை நடக்க உள்ளது. இதேபோல் முதல் ஆண்டு தொடக்க கல்வி பட்டய தேர்வு செப்.21 முதல் 28 வரை, 2ம் ஆண்டு தொடக்க கல்வி பட்டய தேர்வு செப்.29 முதல் அக்.7 வரை, எட்டாம் வகுப்பிற்கு செப்.29 முதல் அக்.5 வரை நடக்கிறது.

இத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள், அவர்கள் சொல்வதை எழுத நியமனம் செய்யப்படும் உதவியாளர்களும் தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு தொற்று இல்லை என்பதற்கான சான்று அவசியம். இல்லையெனில் தேர்வறைக்குள் அனுமதியில்லை. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X