பொது செய்தி

தமிழ்நாடு

'நலம் இல்லாத நலவாரியம்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

பல்லடம்:பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு அறிக்கை;கடந்த, 2007ல் துவக்கப்பட்ட, கிராம கோவில் பூசாரிகள் நலவாரியம், 2015 முதல் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. இதனால் கல்வி உதவி, விபத்து நிவாரணம் உள்ளிட்ட உதவி பெற முடியாமல், பூசாரிகள் தவிக்கின்றனர். நலவாரியத்தில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூசாரிகள் உறுப்பினராக இருந்தும், 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம், நலவாரிய உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டுமென, சென்னைஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம், புதிய உறுப்பினராக இணைய, பதிவை புதுப்பிக்க அறநிலைய துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்தை, பூசாரிகள் நாடுகின்றனர்.ஆனால், உறுப்பினர் சேர்க்கும் இணையதளம், சென்னை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டில் இருப்பதால், எங்களால் இப்பணியை மேற்கொள்ள முடியாது என, அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.நலவாரிய இணையதளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, நலவாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதனால், மாநிலம் முழுக்க உள்ள பல ஆயிரம் பூசாரிகள் குடும்பத்தினர் பயனடைவர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X