பொது செய்தி

தமிழ்நாடு

வெட்டி வீழ்த்தப்படும் மரம்: வாழ்வியல் சூழல் இழக்கும் பறவை யினம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருப்பூர்:வெட்டி வீழ்த்தப்படும் மரங்களால், பல்வேறு பறவையினங்கள் வாழ்வியல் சூழலை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.திருப்பூர் நகரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்பாட்டு பணி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுமானத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன.குறிப்பிட்ட சில மரங்களில், பல்வேறு பறவைகள் தஞ்சம் புகுந்துள்ளன; தங்களின் வாழ்வியல் சூழலாகவே அவற்றை, பறவைகள் மாற்றிக்கொண்டுள்ளன. அவ்வகையில், ஜெய்வாய்பள்ளி அருகே, பறவைகள் தஞ்சமடையும் மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, பசுமை ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பறவைகள் வசிக்க மரம் மற்றும் உணவு மட்டுமே தேவை. குருவி, காகம் உள்ளிட்ட சிறிய பறவைகளுக்கு சராசரி உயரமுள்ள மரங்களும், பருந்துகளுக்கு பல அடி உயரமுள்ள மரமும் தேவை.நகரின் பல இடங்களில், மரங்களே இல்லாமல், கட்டடம் மட்டுமே உள்ளதால், பறவைகள் தஞ்சமடைய இடம்தேடி அலைகின்றன. வளர்ச்சிப்பணி அவசியம் என்ற போதிலும், பறவையினங்களை பாதுகாப்பதும், மிக அவசியம்.பறவை தஞ்சமடையும் மரங்களை கண்டறிந்து, அவற்றை இயன்றவரை வெட்டாமல் வளர்ச்சிப்பணி மேற்கொள்ள வேண்டும்; அல்லது, அந்த மரத்தை வேறோடு பிடுங்கி, மாற்றிடத்தில் நட வேண்டும். இதன் மூலம், பறவையினங்களை பாதுகாக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X