சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் விரும்பி விதிமீறும் வாகனங்கள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தெரிந்தே வாகனங்களில் அதிகளவில் போக்குவரத்து விதிமீறல்கள் நடக்கின்றன.

திண்டுக்கல்லில் பலர் வேண்டுமென்றே வாகனங்களில் செல்கையில் போக்குவரத்து விதிகளை மீறிச் செல்கின்றனர். வாகனங்களில் 112 டெசிபலுக்கு மேல், ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் இங்கு அளவற்ற சத்தத்துடன், இசையுடன் கூடிய ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில இருசக்கர வாகனங்களில் விலங்கு, பறவை மற்றும் சினிமா பாடல் ஹாரன்கள் ஒலிக்கின்றன. சிலஇளைஞர்களின் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களில் சைலன்சரும் அதிக ஓசையுடன் 'படபட'க்கின்றன.இதனால், சாலையில் செல்வோரும், பிறவாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைவதால் விபத்துக்கு வழிசெய்கிறது. முகப்பு விளக்குகளில், கருப்புநிற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.

ஆனால், அந்த விதியும் காற்றில் பறக்கிறது. இதனால், இரவில் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் கூசி விபத்து ஏற்படுகிறது. சிலர் நம்பர் ப்ளேட்களில் விதவிதமான வடிவமைப்பில் எண்களை எழுதியுள்ளனர். போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X