பொது செய்தி

தமிழ்நாடு

'கல்வி தான் சொத்து'

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருப்பூர்;''கல்வி என்பது, பெற்றோர் நமக்கு அளிக்கும் சொத்து,'' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார்.ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில், 'பவர் ஆப் ேஹபிட்' என்ற தலைப்பில், இணையவழி கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி, துணை தலைவர் கருப்பண்ணசாமி, கல்லுாரி முதல்வர் விஜயா, நிர்வாக அலுவலர் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கல்லுாரி முதல்வர் வரவேற்றார்.டி.ஜி.பி., சைலேந்திரபாபு, இணைய வழியாக மாணவர்களிடம் பேசியதாவது;கல்வி என்பது, வாழ்வின் அடிப்படையான தேவை; நாகரிகத்தை வளர்க்கும் கருவி. அறிவியல் சார்ந்த வாழ்க்கையை தவிர்க்க இயலாது. எனவே, தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. கல்வி என்பது, பெற்றோர் நமக்கு அளிக்கும் சொத்து; அதற்கு ஈடாக, நாம் பெற்றோரை பேணி காக்க வேண்டும்.கருங்கல்லை, கண்கவர் சிற்பமாக மாற்றுவது போன்ற வல்லமை படைத்தது, பொறியியல் கல்வி. இக்கல்வியை சிறப்புடன் பயில வேண்டும்.இவ்வாறு, சைலேந்திர பாபு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X