சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'சீக்கிரம் பள்ளிக் கூடத்தை திறங்க பா!'

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பக்க வாத்தியம்



விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் 'கொரோனா' நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு மேற்கொண்டார்.பின், நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், 'தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியதும், பெற்றோரின் மனநிலை அறிந்து, மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அங்கிருந்த, மூத்த நிருபர் ஒருவர், 'சீக்கிரம் பள்ளிக் கூடத்தை திறங்கப்பா... வீட்டுல, அவங்களை வச்சி மேய்க்க முடியலை... டீச்சர் எல்லாம், ரொம்ப பாவமுங்க...' என்றார். அருகிலிருந்த இளம் நிருபர், 'கொரோனாவை விட, வாலு பசங்களால, ரொம்ப பாதிக்கப்படுறீங்க போல...' என்றதும், இருவரும் சிரித்தனர்.


'அதிகாரம் எனும் கொம்பு!'



வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தீர்த்தமலையில், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர், 'அ.தி.மு.க.,வினர் உயிரை பணயம் வைத்து, 'கொரோனா' பரவல் தடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். மருத்துவமனைகளில், நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம்' என்றார்.அப்போது மூத்த நிருபர் ஒருவர், 'என்னது, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட, அ.தி.மு.க., வினருக்கு அதிகாரமா?' என, ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார். அதற்கு, அவரது நண்பர், 'எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சிக்காரர்களுக்கு, தானாகவே அதிகாரம் எனும் கொம்பு முளைச்சிடுது பா... அதை வெட்டணும்' என்றதும்,
சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.


'ஆளே மாறிட்டாரே!'



மதுரை, திருப்பரங்குன்றத்தில், கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது.இதில், மதுரை கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க. செயலரும், எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பா பங்கேற்றார்.அவரிடம் நிருபர்கள், 'சசிகலா, விரைவில் விடுதலையாக போகிறாரே...' எனக் கேள்வி கேட்டனர். சில நொடிகள் யோசித்தவர், 'இக்கால கட்டத்தில், அது முக்கியமான செய்தி அல்ல' என, சமாளித்தார்.தைக் கேட்ட, மூத்த நிருபர் ஒருவர், 'ஜெ., முதல்வராக இருந்தபோது, சசிகலாவின் ஆதரவு, இவருக்கு தான் இருந்தது. அதனால் தான், சட்டசபை தேர்தலின்போது, முதலில் அறிவிக்கப்பட்ட, எம்.எஸ்.பாண்டியன் பெயரை ரத்து செய்துவிட்டு, இவரை வேட்பாளராக அறிவித்தனர்... இப்போ, ஆளே மாறிட்டாரே...' என்றார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'மாறலைன்னா, இவரும் அடையாளம் தெரியாம போயிருப்பார்...' என்றதும், சுற்றியிருந்தோர், அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-செப்-202006:15:11 IST Report Abuse
D.Ambujavalli ஆமாம், ஏற்றி விட்டதற்காக ஏணியையும் தூக்கிக்கொண்டு அலையாவா முடியும்? அன்றைக்கு அவர் தயவு தேவையாக இருந்தது சீட் கிடைத்து உட்கார்ந்தாயிற்று அதோடு,முடிந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X